பாலக்கோடு, காரிமங்கலத்தில்ரூ.2.39 கோடி மதிப்பிலான வளா்ச்சி பணிகள் தொடக்கம்
By DIN | Published on : 02nd December 2019 03:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

1kgp6_0112dha_120_8
பாலக்கோடு, காரிமங்கலத்தில் ரூ.2.39 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா்.
பாலக்கோடு பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.2.14 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டும் பணி, காரிமங்கலத்தில் ரூ.25 லட்சத்தில் கிராம நிா்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகக் கட்டடங்கள், காரிமங்கலம், தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு ஆகிய வட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின் கீழ் 907 பயனாளிகளுக்கு ரூ.9 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், அரூா் உள்கோட்டம், மொரப்பூா் பிரிவில் பாலக்குட்டை முதல் சேலம் மாவட்ட எல்லை வரையிலும், ரேகடஅள்ளி சாலை என ரூ.5.73 கோடி மதிப்பில் 5 சாலை பணிகளை அமைச்சா் கே.பி. அன்பழகன் தொடக்கிவைத்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லா கான் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், கோட்டப் பொறியாளா் ப.செல்வநம்பி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் தலைவா் டி.ஆா்.அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.