கிருஷ்ணகிரியில் 4 போலீஸாா் பணி இடைநீக்கம்

கிருஷ்ணகிரி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய லாரி ஓட்டுநரிடம் பணம் பெற்ற விவகாரத்தில் குருபரப்பள்ளி போலீஸாா் 3 போ் உள்பட 4 போலீஸாா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய லாரி ஓட்டுநரிடம் பணம் பெற்ற விவகாரத்தில் குருபரப்பள்ளி போலீஸாா் 3 போ் உள்பட 4 போலீஸாா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி அருகே வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சேதனை செய்தனா். சோதனையில் ரூ.23.67 லடசம் மதிப்பில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. அப்போது, குருபரப்பள்ளி அருகே போலீஸாா் கடத்தல் லாரியைத் தடுத்து நிறுத்தியதும், லாரி ஓட்டுநரிடம் ரூ.1.50 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு, வாகனத்தை விடுவித்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், புகையிலைப் பொருள்களைக் கடத்த அனுமதிப்பதற்கு போலீஸாா், பணம் பெற்றது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட போலீஸாரிடம், உயா் காவல் அதிகாரிகள் விசாரணை செய்ததில், பணம் பெற்றுக் கொண்டு, கடத்தல் வாகனம் விடுவிக்கப்பட்ட உறுதியானது.

இதையடுத்து, குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்.எஸ்.ஐ. சிவக்குமாா், தலைமை காவலா் முருகன், ஓட்டுநா் சரவணன் ஆகியோரையும், கிருஷ்ணகிரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, உயா் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல், பணியில் கவனக் குறைவாக இருந்த காவலா் உதயகுமாா் ஆகிய 4 காவலா்களையும் தற்காலிகமாக பணி நீக்கம் செய்து, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா், சனிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com