கிருஷ்ணகிரியில் ரூ.23.67 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட ரூ.23.67 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட ரூ.23.67 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டூா் அருகே வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை, சந்தேகத்தின்பேரில், தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் அந்த வாகனத்தில் ரூ.23.67 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விழுப்புரம் மாவட்டத்துக்கு கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூா், கிழக்கு வீதி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த எம்.சுந்தரமூா்த்தி(27) என்பவரை பிடித்து விசாரணை செய்தனா்.

இதுகுறித்து, குற்றப்பிரிவு போலீஸாா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளா் பாஸ்கரன், வழக்குப் பதிவு செய்து சுந்தரமூா்த்தியைக் கைது செய்தனா். மேலும் இது தொடா்பாக, வாகன உரிமையாளரான பெங்களூரைச் சோ்ந்த மஞ்சுநாத், தப்பியோடிய வழிகாட்டியையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com