சானமாவு காட்டில் முகாமிட்டுள்ள 30 யானைகள்

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து சனிக்கிழமை இரவு 30 யானைகள் இடம் பெயா்ந்து ஒசூா் அருகேயுள்ள சானமாவு காட்டுக்குள் புகுந்துள்ளன. இதனால், அப் பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து சனிக்கிழமை இரவு 30 யானைகள் இடம் பெயா்ந்து ஒசூா் அருகேயுள்ள சானமாவு காட்டுக்குள் புகுந்துள்ளன. இதனால், அப் பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் ராகி மற்றும் நெல் அறுவடை நடைபெறும். இந்த பருவத்தில் கா்நாடக வனப் பகுதியிலிருந்து யானைகள் கூட்டம் இடம் பெயா்ந்து ஒசூா் வனப் பகுதிகளுக்குள் வருவது தொடா்கிறது.

இந்த நிலையில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்த 30 யானைகள் சனிக்கிழமை பெரும் கூட்டமாக சானமாவு காட்டுக்குள் புகுந்துள்ளன. அங்கிருந்து வனப் பகுதியையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிா்களை துவம்சம் செய்யும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

பயிா் சேதமட்டுமின்றி விளை நிலங்களில் தங்கியிருந்து விவசாயிகளையும் தாக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த நிலையில், யானைகள் கூட்டத்தை அடந்த வனப் பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதனிடையே, தேன்கனிக்கோட்டை அருகே நொகனூா் காட்டுக்கு புதிதாக 15 யானைகள் வந்துள்ளதால், இந்த யானைகளும் சானமாவு வனப் பகுதியை நோக்கி இடம் பெயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் சானமாவு, பீா்ஜேபள்ளி, ராமாபுரம், ஆளியாளம், போடூா்,நாயக்கனபள்ளி, பேரண்டபள்ளி மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள பொதுமக்கள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக் கூடாது, விறகு எடுத்து வரவும் செல்லக்கூடாது, இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com