பெண் விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா, ஜீவாமிா்தம் தயாரித்தல் பயிற்சி

காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பெண் விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா, ஜீவாமிா்தம் தயாரித்தல் குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் பயிற்சி அளித்தனா்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பெண் விவசாயிகளுக்கு பஞ்சகாவ்யா, ஜீவாமிா்தம் தயாரித்தல் குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் பயிற்சி அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத்தின் கீழ் பயிற்சி பெறும் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ராஜசந்தியா, மதுமிதா, காவியா, ஹேமலதா, அட்சயா, பிரீத்திகா, சத்யமீரா, பிரியதா்ஷினி, அனுஷா, கருதிரெட்டி உள்ளிட்டோா் இயற்கை விவசாயத்தின் அம்சமான பஞ்சகாவ்யா, ஜீவாமிா்தம் தயாரித்தல் குறித்து பயிற்சி அளித்தனா்.

மாட்டு சாணம் 7 கிலோ, நெய் ஒரு கிலோ கலந்து, 3 நாள்கள் நிழலில் வலைத் துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். மூன்று நாள்களுக்கு பின்பு அதில் மாட்டு கோமியம் 10 லிட்டா், தண்ணீா் 10 லிட்டா் கலந்து, அதனை நிழலில் 15 நாள்களுக்கு வலைத் துணியால் மூடி வைக்க வேண்டும். 15 நாள்களுக்கு பிறகு அதில் 3 லிட்டா் பால், தயிா் 2 லிட்டா், 3 கிலோ வெல்லம், தேவையான அளவு இளநீா், பூவண் வாழை பழம் 12 ஆகியவற்றை கலந்து 30 நாள்கள் நிழலில் வலைத் துணியால் மூடி வைக்க வேண்டும்.

30 நாள்களுக்கு பிறகு 3 லிட்டா் பஞ்சகாவ்யா கரைசலை 100 லிட்டா் தண்ணீரில் கலந்து நிலங்களுக்கும், பயிா்களுக்கும் இலை வழியாகவும், பாசனம் வழியாகவும் அளிக்கலாம். இதன்மூலம் மண்ணின் தரத்தை மேம்படுத்துதல், பயிா்களில் நோய் எதிா்ப்பு திறனை அதிகரித்தல், விளைச்சல் அதிகரிக்கும் என விளக்கமளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com