கஞ்சா விற்றவா் கைது
By DIN | Published on : 03rd December 2019 03:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஒசூரில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் சாந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோபி (38). கூலித் தொழிலாளி. இவா் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக நகரப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். இதில் அந்த வீட்டில் 750 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த கோபியை போலீஸாா் கைது செய்தனா்.