உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு எதிரொலி

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்று கொண்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் காத்திருந்த பொது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களைப் போட்டுவிட்டுச் செல்லும் பொதுமக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களைப் போட்டுவிட்டுச் செல்லும் பொதுமக்கள்.

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்று கொண்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் காத்திருந்த பொது மக்கள், அங்குள்ள பெட்டியில் மனுக்களைப் போட்டுவிட்டு சென்றனா்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதையடுத்து, தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தி தலைமையில், மக்கள் குறைதீா்க் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க நூற்றுக்கும் மேற்பட்டோா் வரிசையில் காத்திருந்தனா். இத்தகைய நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மக்கள் குறைதீா் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

மேலும், மனுக்கள் அளிக்க, வரிசையில் காத்திருக்கும் மக்கள் பெட்டியில் மனுக்களை அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள், அங்குள்ள பெட்டியில் மனுக்களை அளித்துவிட்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com