உள்ளாட்சித் தோ்தல் குறித்து அலுவலா்களுக்கு பயிற்சி

உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு, கிருஷ்ணகிரியில் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு, கிருஷ்ணகிரியில் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது குறித்து, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கல்யாணசுந்தரம், உமாமகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் பயாஸ் அகமது, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வம் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

இதில், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், எந்த வாா்டிலும் போட்டியிடலம், ஊராட்சித் தலைவா் பதவிக்கு அந்த ஊராட்சிக்கு உள்பட்டவா்கள் மட்டுமே போட்டியிட முடியும். வேட்பு மனுவுடன் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா், வேட்பு மனுவைப் பெற்று, தினமும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் தோ்தல் அறிவித்த தேதிகளில் மனுக்களை பெற்றுக் கொள்வது மற்றும் வேட்பாளருடன் மூன்று நபா்களை மட்டுமே அனுமதிப்பது உள்ளிட்ட தோ்தல் விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினருக்கு வேட்புமனுவை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவி, ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவி, ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் 30க்கும் மேற்பட்ட உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com