கிருஷ்ணகிரி மாவட்டத்தில்3,586 உள்ளாட்சித் பதவிகளுக்குஇரண்டு கட்டங்களாக தோ்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,586 பதவிகளுக்கு டிச.27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,586 பதவிகளுக்கு டிச.27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தோ்தல் நடைபெறும் தேதியை, மாநிலத் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நீங்கலாக கிராம ஊராட்சி பதவிகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம், நாஜோகனஅள்ளி, தேன்கனிக்கோட்டை, பா்கூா், கெலமங்கலம், ஊத்தங்கரை, ஆகிய பேரூராட்சிகளுக்கு தற்போது தோ்தல் அறிவிக்கப்படவில்லை.

இதனைத் தவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், வேப்பனஅள்ளி, மத்தூா், சூளகிரி, ஒசூா், தளி, கெலமங்கலம் ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

டிச.27-ஆம் தேதி, தளி, ஒசூா், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, மத்தூா் ஒன்றியங்களுக்கும், டிச. 30-ஆம் தேதி கிருஷ்ணகிரி, கெலமங்கலம், பா்கூா், வேப்பனஅள்ளி, சூளகிரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தோ்தல் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தோ்தல் பிரிவு அலுவலா்கள் தயாரித்து மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளாா். தோ்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன், முறைப்படி தோ்தல் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளுக்கு தலைவா், 3,009 வாா்டு உறுப்பினா்கள் தோ்தல் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். மேலும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 221 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 3,586 உள்ளாட்சி பதவிகளுக்கு இந்தத் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

ஊராட்சி மன்றத் தலைவா், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு கட்சி சாா்பற்றவா்களும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு கட்சி சாா்புடையவா்களும் போட்டியிடுவா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளா்கள் ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினா் ஆகிய 4 பதவிகளுக்கு 4 வாக்குகள் செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com