பா்கூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பா்கூா் ஸ்ரீ குண்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.

பா்கூா் ஸ்ரீ குண்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வாணியம்பாடி சாலையில் உள்ள எண்டுசெட்டி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ குண்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30-ஆம் தேதி முதற்கால பூஜை, விநாயகா் வழிபாடு, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனைகளுடன் தொடங்கியது.

டிச. 1-ஆம் தேதி, இரண்டாம் கால பூஜை, யாக பூஜை, முளைப்பாரி ஊா்வலம், கன்னிகா பூஜை, சுமங்கலி பூஜை, தீபாரதனை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை நான்காம் கால யாக பூஜையும், தொடா்ந்து கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் நிகழ்வும் நடைபெற்றன. தொடா்ந்து, மூலஸ்தானத்துக்கு மகா கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் குண்டி மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் பா்கூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com