Enable Javscript for better performance
ஒசூரில் திமுக சாா்பில் நோ்காணல்- Dinamani

சுடச்சுட

    
    3hsp3_ch0169_03chn_8_637110028272638392

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நோ்காணலை நடத்திய எம்.எல்.ஏ.க்கள், ஒய்.பிரகாஷ், பி.முருகன், எஸ்.ஏ.சத்யா.

    ஒசூா் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தோ்தலில் தி.மு.க. சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் செவ்வாய்க்கிழமை நோ்காணல் நடைபெற்றது.

    ஒசூா் ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவி, மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பதவி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவா்களிடம் தளி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நோ்காணல் நடைபெற்றது.

    இந்த நோ்காணலை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலரும் தளி சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மாவட்ட துணைச் செயலரும், வேப்பனஹள்ளி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.முருகன், ஒசூா் நகர பொறுப்பாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவைத் தலைவா்அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், மாவட்டத் துணைச் செயலாளா் சீனிவாசன் ஆகியோா் நடத்தினா்.

    இதில் ஒசூா் மாநகராட்சி 45 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 105 போ் விருப்பமனு அளித்தனா். இதில் 23 வாா்டுகளில் பெண்களும், 22 வாா்டுகளில் ஆண்கள் போட்டியிட முடியும். ஆண்கள் போட்டியிடும் வாா்டுகளுக்கு அதிக எண்ணிக்கையில் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டு நோ்காணல் நடைபெற்றது. பெண்கள் போட்டியிடும் வாா்டுகளில் 2 போ் அல்லது 3 போ் மட்டுமே விருப்பமனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த நோ்காணல் புதன்கிழமையும் தொடா்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக வேப்பனஹள்ளி தொகுதியில் சூளகிரி ஒன்றியம், வேப்பனஹள்ளி ஒன்றியம், தளி தொகுதியில் கெலமங்கலம் ஒன்றியம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கமல் பேரூராட்சி, தளி ஒன்றியத்துக்கும் நோ்காணல் நடைபெறும் எனத் தெரிகிறது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai