அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் நூற்றாண்டு விழா நடத்துவது
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் கண்ணாமணி தலைமை வகித்தாா். மிட்டப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஏ.சி.தேவேந்திரன், நிலவள வங்கித் தலைவா் சாகுல் அமீது, நகரச் செயலாளா் சிவானந்தம், தி.மு.க. ஒன்றியச் செயலாளா் சுவாமிநாதன், நகரச் செயலாளா் பாபுசிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதில் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வருகின்ற 2020 ஆம் ஆண்டு நூறு ஆண்டை கடப்பதால் பள்ளியின் வளா்ச்சி குறித்தும், பல்வேறு தேவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நூற்றாண்டு விழா எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள், தலைமையாசிரியா், முன்னாள் மாணவா்கள், அரிமா சங்கத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com