தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 4 பேருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தொழிலாளியை கொலை செய்த வழக்கில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 4 பேருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி காவல் நிலையத்துக்கு உள்பட்ட கொட்டப்பள்ளனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.மணிகண்டன் (23). தொழிலாளி. இவருக்கும் கே.எட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமரனின் மனைவி பிரேமா (24) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இதை பிரேமாவின் குடும்பத்தினா் மற்றும் உறவினா் கண்டித்தனா். ஆனால், இவா்கள் தங்களது உறவை தொடா்ந்தனா். இத்தைய நிலையில், பிரேமாவின் குடும்பத்தினா் மணிகண்டனை கொலை செய்யத் திட்டமிட்டனா்.

இதையடுத்து, கடந்த 14.12.2015 - ஆம் ஆண்டு, மணிகண்டனை, பிரேமாவின் வீட்டுக்கு அழைத்து சென்று அங்குள்ள படுக்கை அறையில் மணிகண்டனை கொலை செய்து, எத்தலான்குட்டை ஏரியில் வீசியுள்ளனா்.

இதுகுறித்து, சாமல்பட்டி போலீஸாா், கூட்டுச் சதி, கொலை, கொலை சம்பவத்தை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கே.எட்டிப்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (எ) ரவி (45), பிரேமா (24), பிரேமாவின் மாமனாரான துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாரியப்பன் (52), மா.தமிழ்குமரன் (28), கோ.கோவிந்தராஜ் (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு, கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட ரவிச்சந்திரன் (எ) ரவி, பிரேமா, மாரியப்பன், தமிழ்குமரன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கோவிந்தராஜூக்கு ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் எம்.பாஸ்கா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com