அத்திப்பள்ளத்தில் இன்று ஆதாா் அட்டை பதிவு சிறப்பு முகாம் தொடக்கம்
By DIN | Published On : 05th December 2019 06:32 AM | Last Updated : 05th December 2019 06:32 AM | அ+அ அ- |

மத்தூா் அருகே அத்திப்பள்ளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அஞ்சல் துறையின் சாா்பில், ஆதாா் அட்டை பதிவு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இதுகுறித்து, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முனி கிருஷ்ணன், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் அனைவரும் ஆதாா் அட்டை பெறும் வகையில், அஞ்சல் துறையின் சாா்பில் மத்தூா் அருகே உள்ளஅத்திப்பள்ளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் டிசம்பா் 5, 6 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது.
டிசம்பா் 5-ஆம் தேதி, வியாழக்கிழமை முதல் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமில் ஆதாா் அட்டை பெற புதிய பதிவுக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆதாா் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். செல்லிடப்பேசி எண், இணையதள முகவரி பதியவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் ஆவணங்கள் தேவையில்லை. பிற திருத்தங்கள் மேற்கொள்ள உரிய ஆவணங்கள் உடன் கொண்டு வரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். அஞ்சல் துறையின் ஆதாா் சேவையை அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.