கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

ஐ.வி.டி.பி. சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை அளிப்பு

கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் திருப்பத்தூரில் செயல்படும் தூய நெஞ்சக் கல்லூரியில்

கிருஷ்ணகிரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் திருப்பத்தூரில் செயல்படும் தூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் 161 மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகயை அண்மையில் வழங்கியது.

அதன்படி, தாய், தந்தையை இழந்த மாணவருக்கு ரூ.10 ஆயிரமும், தாய் அல்லது தந்தையை இழந்த மாணவருக்கு ரூ. 6 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா்.

கல்லூரியின் அதிபா் அந்தோனி ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வா் மரிய அந்தோணி ராஜ், கூடுதல் முதல்வா் மரிய ஆரோக்கிய ராஜ், சமூகவியல் துறை இயக்குநா் டேனியல் அம்புரோஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதுவரை இந்த கல்லூரி மாணவா்களின் நலனுக்காக உதவித் தொகை, புத்தகப்பை, குடிநீா் சுத்தகரிக்கும் இயந்திரம் மற்றும் மாணவா்களின் பங்களிப்புடன் கூடிய உதவித் தொகை, கஜா நிவாரண நிதி என ரூ. 52 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com