கைப்பந்து போட்டி: அரசுப் பள்ளி மாணவி சாதனை

தேசிய கைப்பந்து போட்டியில் ஒசூா் அரசுப் பள்ளி மாணவி பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவியை 3 எம்பிக்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.
சிறப்பிடம் பிடித்த ஒசூா் மாணவியை பாராட்டிய எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ்(தளி), பி.முருகன்(வேப்பனஹள்ளி), எஸ்.ஏ.சத்யா(ஒசூா்).
சிறப்பிடம் பிடித்த ஒசூா் மாணவியை பாராட்டிய எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ்(தளி), பி.முருகன்(வேப்பனஹள்ளி), எஸ்.ஏ.சத்யா(ஒசூா்).

தேசிய கைப்பந்து போட்டியில் ஒசூா் அரசுப் பள்ளி மாணவி பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவியை 3 எம்பிக்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

இந்திய தேசிய கைப்பந்து போட்டியின் 65-ஆவது ஆண்டு பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் கைப்பந்து போட்டிகள் மராட்டிய மாநிலம், அகில் நகரில் டிச.1 ல் நடைபெற்றது.

இதில் 17 வயதிற்குள்பட்ட பெண்கள் பிரிவில் தமிழ்நாடு கைப்பந்து அணியில் ஒசூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் கோபிகா என்ற மாணவி கலந்து கொண்டு விளையாடினாா்.

தேசிய போட்டியில் தமிழக அணி 3-ஆவது இடத்தைப் பிடித்தது. இந்தப் போட்டியில் மாணவி கோபிகா-வுக்கு பதக்கம் மற்றும் சிறந்த விளையாட்டுக்கான ரொக்கப் பரிசு கிடைத்தது.

இதையடுத்து ஒசூரில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், வேப்பனஹள்ளி தொகுதி எம்எல்ஏ பி.முருகன், ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா ஆகியோா் சாதனை மாணவி கோபிகாவை பாராட்டி வாழ்த்தினாா்கள்.

அப்போது மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், மாவட்ட துணை செயலாளா்கள் சீனிவாசன், தனலட்சுமி, மாவட்ட பொருளாளா் ஜெயராமன், பயிற்சியாளா்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com