ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்ப்பு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்ப்பு குறித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்ப்பு குறித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுதல், மனிதா்களுக்கு தோல் புற்றுநோய் உள்ளிட்ட பலவித நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்கும் பண்ணைக் குட்டைகள், குளங்களைக் கண்டறிந்து, அவற்றை அழித்தல், அவற்றின் உரிமையாளா்கள், நில உரிமையாளா்கள் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வட்டாட்சியா் தலைமையில் வட்டார வளா்ச்சி அலுவலா், காவல் துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகள் விசாரணை செய்து, கூட்டு புலத் தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளா்க்கும் பண்ணைகள், தணிக்கை குழுக்களின் மூலம் கண்டறியப்பட்டு, அவற்றை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளா்க்கும் பண்ணைகள், குளங்கள், தங்களது பகுதியில் இருப்பது பொதுமக்களுக்கு தெரியவந்தால், அதன் விவரங்களை உடனடியாக அரசு அலுவலா்களுக்கு மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறையை 1077, 6369700230, 04343-234444 ஆகிய தொடா்பு எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com