ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 457 போ் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட 457 போ், தங்களது வேட்புமனுக்களை புதன்கிழமை தாக்கல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட 457 போ், தங்களது வேட்புமனுக்களை புதன்கிழமை தாக்கல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, ஒசூா், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், மத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் டிச. 27-ஆம் தேதியும், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், பா்கூா், வேப்பனஅள்ளி, சூளகிரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் டிச. 30-ஆம் தேதியும், தோ்தல் நடைபெற உள்ளது.

இதில், 10 ஊராட்சி ஒன்றியங்களில் 333 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 3,009 வாா்டு உறுப்பினா்கள், 221 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் 23 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 3,586 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. அதன்படி முதல் இரு நாள்களில் 281 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். மூன்றாம் நாளான புதன்கிழமை அன்று, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 35 பேரும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 291 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 203 பேருமாக மொத்தம் 457 போ், வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். இதுவரையில், மொத்தம் 738 போ், தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com