சுடச்சுட

  

  கிருஷ்ணகிரியில் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  வானம் வசப்படும் என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வில், பிரபஞ்சன் எனும் மானுடன் என்ற தலைப்பில் புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் விசாகன், பிரபஞ்சன் ஒரு வாழ்நாள் பெண்ணியவாதி என்ற தலைப்பில் கணேஷ் குமார், தாழ்ப் பறக்காத பரததையா கொடி என்ற நூல் குறித்து அம்பேத் ஆகியோர் பேசினர். 
  இந்த நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சங்கர், செயலாளர் வசந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai