சுடச்சுட

  

  கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு

  By DIN  |   Published on : 13th February 2019 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், வழங்கினார்.
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 2018 - 19 -ஆம் ஆண்டுக்கான சமூக பங்கேற்பு நிகழ்வுகள் வரையறுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் நிகழ்வாக பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009, சுத்தம் சுகாதாரம் ஆகியவை குறித்து பள்ளி மாணவ, மாணவியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளிகள் ஆகியவற்றில்  1 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் பயிலும்  மாணவ, மாணவியர்களுக்கு ஓவியம்,  கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. 
  ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 160 மாணவ, மாணவியர், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர். 8 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவியர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 
  அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, உதவித் திட்ட அலுவலர்கள் நாராயணா, சூசைநாதன், தலைமையாசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்
  பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai