மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நூறு நாள் வேலை கேட்டு காத்திருப்புப் போராட்டம்

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை மற்றும் 4 மணி நேர வேலைக்கு முழு  ஊதியம்

ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நூறு நாள் வேலை மற்றும் 4 மணி நேர வேலைக்கு முழு  ஊதியம் வழங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்  காத்திருப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடைபெற்ற 
இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி. திருப்பதி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம். சுரேஷ், ஒன்றியத் தலைவர் பழனி, மாவட்டத் துணைத் தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் குப்புசாமி, ராமலிங்கம், பூசை, முருகேஷ்வரி, ராணி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், 10 நாள்களுக்குள் அனைவருக்கும் வேலை தருவதாக உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com