சுடச்சுட

  

  ஒசூர் கோட்டம், சூளகிரியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி புறவழிச் சாலையில், சூளகிரி போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர்கள் உத்தனபள்ளி அருகே கன்னசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லேஷ் (38), பெரிய சப்படி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் (43) என்பதும், இவர்கள் சூளகிரி மற்றும் ஒசூர் பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும், இவர்கள் மீது சூளகிரி மற்றும் ஒசூர் நகர காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai