சுடச்சுட

  

  பொங்கல் பண்டிகை: சந்தைகளில் கோழி, ஆடு, மாடு அதிகளவில் விற்பனை

  By DIN  |   Published on : 12th January 2019 04:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரியை அடுத்துள்ள குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.9 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின.
  கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும், வெள்ளிக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். ஆந்திரம், கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த சந்தையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்று தங்களது கால்நடைகளை விற்பதும், வாங்கிச் செல்வதும் வழக்கம்.
  பொங்கல் பண்டிகையையொட்டி, குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடு, கோழிகளை வாங்கவும், விற்கவும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதில்,  ரூ.9 கோடி மதிப்பிலான ஆடுகள், கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
  ஊத்தங்கரையில்...
  ஊத்தங்கரை சந்தையில் திருப்பத்தூர், அரூர், மொரப்பூர், செங்கம், திருவண்ணாமலை, போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில் இருந்து மாடுகளை கொண்டுவந்து விற்பனை செய்தும், வாங்கியும் செல்வது வழக்கம். அண்டை மாநிலமான கேரளம், பாண்டிச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் சென்னை, கோவை, வேலூர் போன்ற பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து இங்கு  மாடுகளை வாங்கி செல்கின்றனர்.
  பொங்கலையொட்டி, 1,500 க்கும் மேற்பட்ட மாடுகள் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வந்தன. இதில், மொத்தம் ரூ.1.50 கோடிக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai