சுடச்சுட

  

  சிக்க பூவத்தி, வேப்பனஅள்ளி கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டங்கள்

  By DIN  |   Published on : 13th January 2019 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிக்க பூவத்தி, வேப்பனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வேப்பனஅள்ளி ஆகிய இடங்களில் திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டங்களில் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். 
  மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்துடன், திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிக்க பூவத்தி கிராமத்தில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் ஊராட்சி கூட்டம் நடைபெற்றது.
  இதில் அந்தக் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் டேம்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற மக்கள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். 
  வேப்பனஅள்ளியில்.... வேப்பனஅள்ளியில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்துக்கு முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பிரகாஷ் எம்எல்ஏ, திமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கழிவுநீர் கால்வாய், முதியோர் உதவித் தொகை, தளிகோட்டூர் பகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடையின் அவசியம், சீராக குடிநீர் விநியோகம், கோனேகவுண்டனூருக்கு பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் பேசினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai