சுடச்சுட

  


  கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,851 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்க காசுகளை மக்களவை உறுப்பினர் கே.அசோக்குமார் வழங்கினார்.
  நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி தலைமை வகித்தார். ரூ.6.50 கோடியில் திருமண நிதியுதவி, ரூ.4.18 கோடி மதிப்பிலான 8 கிராம் தங்க காசுகள் என பர்கூர் ஒன்றியத்தில் 206 பேரும், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த 203 பயனாளிகள், மத்தூரைச் சேர்ந்த 243 பயனாளிகள், சூளகிரியைச் சேர்ந்த 274 பயனாளிகள், தளியைச் சேர்ந்த 264 பயனாளிகள், ஊத்தங்கரையைச் சேர்ந்த 283 பயனாளிகள், வேப்பனஅள்ளியைச் சேர்ந்த 143 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
  எம்எல்ஏ-க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட சமுக நலத் துறை அலுவலர் அன்புகுளோரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai