பென்னாகரம் அருகே முறையான குடிநீர்வசதி கோரி சாலை மறியல்

பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் முறையான குடிநீர்வசதி கோரி அப்பகுதி பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் முறையான குடிநீர்வசதி கோரி அப்பகுதி பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்  அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்குள்பட்ட மடம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் அப்பகுதி மக்கள் நலனைக் கருதி பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மூலம்  மடம் பகுதிகளில் 5 சிறிய நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டன.  இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. 
இப்பகுதி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் மூலம் 2 நாள்களுக்கு ஒருமுறை சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கபடுவதாகக் கூறப்படுகிறது.இதனால் அன்றாட தேவைக்கான தண்ணீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் சிரமமடைந்தனர். இதனைக் கண்டித்து திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் பென்னாரகம் - நாகமரை சாலையில் 50- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முறையான குடிநீர் வசதி செய்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன்,  வட்டாட்சியர் இல.பிரசன்னமூர்த்தி,  பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர்கள் பெரியார், முனியசாமி  ஆகியோர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மடம் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர்.இதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் சாலை மறியலைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com