கிருஷ்ணகிரி, அஞ்செட்டியில் எருது விடும் விழா

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எருது விடும் விழா நடைபெற்றது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எருது விடும் விழா நடைபெற்றது.
அதன்படி, கோயில் காளைகள் ஊரின் மையப் பகுதியான கோயில் அருகே அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், காளை மற்றும் வீட்டில் வளர்க்கும் எருது, பசு மாடுகளை ஓட விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட எருதுகளை ஓட விட்டு கிராம மக்கள் மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரியில் கிட்டம்பட்டி, பெருமாள் நகர், மோட்டூர், பர்கூர், கிருஷ்ணகிரி அணை அவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்றது. ஓடும் எருதுகளை உற்சாகப்படுத்தும் வகையில், இளைஞர்களும் உடன் ஓடினர்.
அப்போது, சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். எந்த அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அஞ்செட்டியில்... கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே அஞ்செட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
எருது விடும் விழாவில் கலந்து கொள்ள சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டன.
வண்ண வண்ண கொடிகள், அலங்காரத் தட்டிகள் மற்றும் பரிசுப் பொருள்கள் காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டு அவை அணி அணியாகக் கூட்டத்தில் சீறிப் பாய்ந்தன. களத்தில் சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கினர்.
அப்போது காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசுப் பொருள்களையும் அலங்காரத் தட்டிகளையும் பறித்துச் சென்றனர். விழாவில் அஞ்செட்டி மற்றும் அதன் அருகே சீங்கோட்டை சித்தாண்டபுரம், வண்ணாத்திபட்டி, மாவண்ணட்டி, புதூர், தாம்சனப்பள்ளி, தேவன்தொட்டி, உரிகம், தக்கட்டி, கோட்டையூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு எருது விடும் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com