சுடச்சுட

    

    ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது

    By DIN  |   Published on : 01st July 2019 04:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    okenical

    விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனர்.
    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களான கர்நாடகம்,ஆந்திரம் மற்றும் கேரளத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது.

    எண்ணெய் மசாஜ், பிராதன அருவி பகுதிகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் எளிதாக செல்ல முடிந்தது. அருவியில் குளித்து முடித்த சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணித்து காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். தொங்கும் பாலம், சிறுவர் பூங்கா,முதலைப்பண்ணை மற்றும் மீன் காட்சியகத்தில் வழக்கத்தைவிட  சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது.சத்திரம், முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai