நகைக் கடை உரிமையாளரை கடத்தி ரூ.40 லட்சம் பறித்த கும்பல்: போலீஸார் விசாரணை

கெலமங்கலத்தில் நகைக்கடை உரிமையாளரைக் கடத்திச் சென்று ரூ.40 லட்சம் பறித்துச் சென்ற மர்மக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

கெலமங்கலத்தில் நகைக்கடை உரிமையாளரைக் கடத்திச் சென்று ரூ.40 லட்சம் பறித்துச் சென்ற மர்மக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  கெலமங்கலத்தில் தனியார் பள்ளி அருகில் குடியிருந்து வருபவர் குமான் ராம் (47).  இவர் கெலமங்கலத்தில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது மகன் ஷாகர் (5).  ஒசூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 8-ஆம் தேதி பள்ளி சீருடை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் குமான் ராம் ஒசூருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது  டி.தம்மண்டரப்பள்ளி அருகில் சென்ற போது கர்நாடக மாநில பதிவெண்  கொண்ட காரில் வந்த  7 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி குமான் ராமை கடத்திச் சென்றனர். மேலும், அவரது இரு சக்கர வாகனத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றனர். 
அவரை பைரமங்கலம்,  ஒன்னல்வாடி, ஜொனபண்டா,  மதகொண்டப்பள்ளி வழியாக அந்தப் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கு குமான் ராமிடம் ரூ.1 கோடி கேட்டு அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது. இதையடுத்து குமான் ராம் தனது தம்பி மீராமாஸை  தொடர்பு கொண்டு ரூ.40 லட்சத்தை எடுத்து வரச் செய்துள்ளார்.
அதன்படி அவரும் ரூ.40 லட்சம் கொண்டு சென்றுள்ளார்.  அந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல், குமான் ராமை விடுவித்துள்ளது. மேலும், இது பற்றி வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர்.  
இதனால் குமான் ராம் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல்  இருந்துள்ளார்.  இந்த நிலையில் குமான்ராம் செவ்வாய்க்கிழமை  கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com