சுடச்சுட

  

  ஊத்தங்கரையை அடுத்த சின்ன ஆனந்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை  கேலி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  சின்னகாமாட்சிபட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரசாந்த் (23), சக்திதாஸ் (23),  ஸ்ரீதர் (19)  ஆகிய மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவியை கேலி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். தந்தை கொடுத்த புகாரின்பேரில் கல்லாவி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூன்றுபேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai