சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூலை 13-ஆம் தேதி கீழ்கண்ட இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை தீர்க்கவும், குடும்ப அட்டைதாரர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் கீழ்கண்ட வட்டங்களில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
    அதன்படி, கீழ்கண்ட இடங்களில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் கிருஷ்ணகிரி வட்டத்தில் கீழ் பையூர் கிராமத்திலும், ஊத்தங்கரை - குன்னத்தூர், போச்சம்பள்ளி - அந்தேரிப்பட்டி, பர்கூர் - வரட்டனப்பள்ளி, சூளகிரி - ஒசஅள்ளி, ஒசூர் - கன்னூர், தேன்கனிக்கோட்டை - பி.தம்மாண்டரபள்ளி ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
    இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் அவர்
    தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai