சுடச்சுட

  

  பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பேரவை நடைபெற்றது.
  இதில், 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
  பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி. மாதன் தலைமை வகித்தார். இதில் அரசியல் விளக்கம் குறித்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. தங்கபாலு மற்றும்  மாவட்டச் செயலாளர் ஏ. குமார் ஆகியோர் உரையாற்றினர்.
  கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சோலை, அர்ஜூணன்,,விஸ்வநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் வி. ரவி, பி.எம். முருகேசன் மற்றும் பகுதி செயலாளர்கள் கே. அன்பு, வெள்ளியங்கிரி உள்ளிட்ட 30-க்கும்  மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai