சுடச்சுட

  

  "ஒசூர் ஐ.டி. பார்க்கை திறந்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்' 

  By DIN  |   Published on : 13th July 2019 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒசூரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐ.டி. பார்க்கை உடனடியாகத் திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என ஒசூர் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா சட்டப்பேரவையில் தெரிவித்தார். 
  இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் தெரிவித்தது: ஒசூர் விஸ்வநாதபுரத்தில் 174 ஏக்கர் பரப்பளவில்  முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கப்பட்டது. இதனைத் திறந்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஒசூர் இஎஸ்ஐ மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டும். ஒசூரில் பி.எப். அலுவலகம் அமைக்க வேண்டும். பெலத்தூரில் இயங்கி வந்த ஏசியன் பேரிங் தொழில்சாலையை திறக்க வேண்டும். ஒசூர், சிப்காட், அட்கோ, மத்திகிரி காவல் நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமித்து தரம் உயர்த்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை ஆட்டோ உதிரி பாகங்களுக்கு 28 சதவீதமாக உயர்த்தப்பட்டதை 18 சதவீதமாக குறைக்க வேண்டும். 
  ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்கள், காய்கறிகள், பழங்கள், மலர்கள் ஆகியவற்றை சென்னைக்கு கொண்டு செல்ல பல சுங்கச் சாவடிகளைக் கடக்க வேண்டியுள்ளது. இதனால், ஒசூர்-ஜோலார்பேட்டை ரயில்பாதை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
  ஒசூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டதால், கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் வீட்டுவரி, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அதில்
  தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai