சுடச்சுட

  

  ஒசூர் வட்டம், கெலவரப்பள்ளி அணையிலிருந்து வலதுபுற மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் 2019-2020-ம் ஆண்டு முதல்போக பாசனத்துக்காக மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்தார். 
  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க ஜூலை 12 முதல் அணையிலிருந்து பாசனத்துக்காக 150 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கெலவரப்பள்ளி அணையின் இடதுபுற பிரதான கால்வாய் மற்றும் பிரிவு கால்வாய்கள் மூலம் 5,918 ஏக்கரும், வலதுபுற பிரதான கால்வாய் மூலம் 2,082 ஏக்கரும் என மொத்தம் 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பயன் அடைகின்றன.
  இதன் மூலம் ஒசூர் மற்றும் சூளகிரி வட்டத்திலுள்ள தட்டகானப்பள்ளி, பூதிநத்தம், பெத்த முத்தாளி, முத்தாளி, அட்டூர், கதிரேப்பள்ளி, மாரசந்திரம், கொத்தூர், மோரனப்பள்ளி, தொரப்பள்ளி, திருச்சிப்பள்ளி, காமன்தொட்டி, தின்னூர், சுபகிரி, கோனேரிப்பள்ளி, சின்னகொல்லு, பெத்தகொல்லு, சாமனப்பள்ளி, சென்னத்தூர், அட்டகுறுக்கி, நல்லகானகொத்தப்பள்ளி, மார்த்தாண்டப்பள்ளி ஆகிய 22 கிராமங்கள் பயன்பெறும்.
   அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு வரும் நீர்வரத்து ஆகியவைகளை கருத்தில் கொண்டு, 150 நாள்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படும். தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில் இரு கால்வாய்களிலும், வலதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 26 கன அடி மற்றும் இடதுபுற பிரதான கால்வாயில் விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 62 கன அடி என மொத்தம் 88 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும்.
  எனவே, விவசாயிகள் நீர்ப் பங்கீட்டில் பொதுப்பணித் துறையினருடன் ஒத்துழைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக விளைச்சல் பெறும் நோக்கத்துடன் செயல்படுமாறு மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்.பி. கே.அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai