சுடச்சுட

  

  பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா

  By DIN  |   Published on : 13th July 2019 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பென்னாகரம் அருகே குள்ளனூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  பென்னாகரம் அருகே குள்ளனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் குள்ளனூர் அரசுப் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவரும், ஒருங்கிணைந்த தருமபுரி-
  கிருஷ்ணகிரி மாவட்ட பால்வளத் தலைவருமான டி.ஆர்.அன்
  பழகன் கலந்துகொண்டு, பள்ளியில் பயிலும் 144 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
  பின்னர் பள்ளி மாணவர்களிடம் தமிழக அரசின் திட்டங்களை எடுத்துரைத்து, அதனை பயன்படுத்தி  தங்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் யோகா, விளையாட்டு போன்ற வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.
  இதில், பொருளாளர் தவமணி, பள்ளித் தலைமை ஆசிரியர் சிங்கார வேலன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai