ருக்மணி சமேத பாண்டுரங்க கோயிலில் பிரம்மோத்சவ விழா கொடியேற்றம்
By DIN | Published On : 13th July 2019 09:57 AM | Last Updated : 13th July 2019 09:57 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அக்ரஹாரம், சிவாஜி நகரில் அமைந்துள்ள ருக்மணி சமேத அருள்மிகு பாண்டுரங்கா, அருள்மிகு அம்பா பவானி திருக்கோயிலின் 83-ஆவது ஆண்டு பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தினமும் காலை, மாலையில் பூஜைகள், பஜனைகள், கோலாட்டம், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
ஜூலை 17-ஆம் தேதி ருக்மணி திருக்கல்யாண வைபவமும், உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் நகர்வலமும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.