Enable Javscript for better performance
ஒசூர் கோட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.289 கோடி வருமான வரி வசூல்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் கோட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.289 கோடி வருமான வரி வசூல்

    By DIN  |   Published on : 25th July 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூர் கோட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 289 கோடி வருமான வரி வசூலாகி உள்ளதாக ஒசூர் கோட்ட வருமான வரி உதவி ஆணையாளர் பிரகாஷ் வி. தன்வஷி தெரிவித்தார்.
     ஒசூர் கோட்டத்தில் 159-ஆவது வருமான வரி தினம் (ஜூலை 24) புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
     இந்த தினத்தை முன்னிட்டு வருமான வரித் துறை சார்பில் ஆலவப்பள்ளியில் உள்ள ரமண மகரிஷி ஆதரவற்றோர் இல்லத்தில் மரம் நடும் விழா நடைபெற்றது. பின்னர் அங்குள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
     இதைத் தொடர்ந்து, ஒசூர் வருமான வரி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டின் வளர்ச்சிக்கு வருமான வரியின் முக்கிய பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் ஒசூர் ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், முல்லை நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
     இந்தப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை உதவி ஆணையாளர் பிரகாஷ் வி. தன்வஷி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ஒசூர் கோட்டத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள் உள்ளன. ஒசூர் கோட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 289 கோடி வருமான வரி வசூலிக்கப்பட்டது.
     வருமான வரி செலுத்துவதன் மூலம் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். இதன்மூலம் நாட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள், கல்வி, சுகாதாரம் போன்ற பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன என்றார். விழாவில் ஒசூர் கோட்ட வருமான வரி அலுவலர் ராஜன், வருமான வரி அலுவலர் (டி.டி.எஸ்.) கணபதி சுந்தரம், வருமான வரி அலுவலர் கங்கா, ஆடிட்டர்கள் மணி, குத்தாலிங்கம், பேட்டராயசுவாமி, ஜெகன்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai