Enable Javscript for better performance
கடன்களை விரைந்து வழங்கும் பணியில் எஸ்பிஐ வங்கி- Dinamani

சுடச்சுட

    

    வீட்டுக் கடன், வாகன கடன், கல்வி கடன் உள்ளிட்ட கடன்களை வழங்கும் பணியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா விரைந்து செயல்பட்டு வருகிறது என எஸ்பிஐ மண்டல மேலாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.
     ஒசூர் சூசூவாடியில் உள்ள எஸ்பிஐ ராஸ்மாக் வங்கிக் கிளையில் வாடிக்கையாளர்களுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
     இந் நிகழ்ச்சிக்கு வங்கி உதவி பொது மேலாளர் வி.கே. ரேகா தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட எஸ்பிஐ மண்டல மேலாளர் மணிவண்ணன் பேசியது:
     ஒசூர் மிகப் பெரிய வளர்ந்து வரும் தொழில் நகரமாக உள்ளது. இங்கு தொழில் வளர்ச்சி வேகமடைந்து வருகிறது. இப் பகுதி மக்களுக்குத் தேவையான கடன் வழங்கும் பணிகளை எஸ்.பி.ஐ. விரைந்து செயல்படுத்தி வருகிறது. வீட்டுக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை இந்த வங்கி வழங்கி வருகிறது என்றார்.
     பாரத பிரதமரின் வீட்டுக் கடன் திட்டத்தில் மானியம் பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு, தனி வீடு, நிலம் வாங்குவது, வீட்டின் மீது அடமானக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை விரைந்து பெறுவது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்பிஐ மண்டல மேலாளர் மணிவண்ணன், எஸ்பிஐ ராஸ்மாக் வங்கியின் உதவி பொது மேலாளர் வி.கே.ரேகா, முதன்மை மேலாளர் அரவிந்த், தொழில் முனைவோர் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai