Enable Javscript for better performance
கழிவுகளால் நிரம்பிய பரசனேரி தூர்வாரப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை அறிஞர் அண்ணா அரசுப் பேருந்து நிலையம் அருகே சுமார் 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரசனேரி உள்ளது.
     இந்த ஏரிதான் பல ஆண்டுகளாக ஊத்தங்கரை நகர மக்களுக்கும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும் நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் ஆதாரமாய் திகழ்ந்து வந்தது.
     கடந்த சில ஆண்டுகளாக ஊத்தங்கரை பகுதியில் மழை பொய்த்துப் போனதால் இந்த ஏரிக்கு நீர்வரத்துக் குறைந்து போனது. ஏரிக்கு வரும் நீரோடைகள் அனைத்தும் செடிகொடிகள், முட் புதர்கள் நிறைந்து காணப்படுவதுடன் ஏரியை நான்கில் ஒரு பாகம் ஆக்கிரமிப்பு செய்து நீர் வரும் பாதைகளை தடை செய்துள்ளனர்.
     எனவே இவற்றை உடனடியாக தூர்வார வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
     இந்த ஏரியில் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள், குப்பைகள் போன்றவை சாலைகளின் இருபுறமும் கொட்டப்படுவதாலும், கழிவுநீர் ஏரியில் கலப்பதாலும் இந்த ஏரி தற்போது மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்தச் சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை அடைத்துக் கொண்டு செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
     வேலூர் பகுதியில் இருந்து வரும்போது இந்த பிரதான சாலை வழியாகதான் வரவேண்டும். ஊத்தங்கரையின் நுழைவு வாயிலின் அருகில் உள்ளதால் துர்நாற்றத்துடன் பயணிகள் வந்து செல்கின்றனர். இப் பகுதி மக்களின் நீர் ஆதாரம் மாசடைவதுடன் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது.
     இதுதொடர்பாக ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன் கூறியதாவது:
     இந்த ஏரியைத் தூ தன்னார்வலர்கள் முன்வந்து தூர்வாரலாம். துர்நாற்றத்தைப் போக்க அந்தப் பகுதியில் பிளீச்சிங் பவுடர் போடப்படுகிறது என்றார். ஊத்தங்கரை மக்களின் நீர் ஆதாரமாக இருக்கும் இந்த ஏரியைத் தூர்வாரி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai