Enable Javscript for better performance
பணியின்போது அரசு அலுவலர் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியின்போது புதன்கிழமை உயிரிழந்தார்.
     தருமபுரி மாவட்டம் இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(53). இவர், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (சத்துணவு) பணியாற்றி வந்தார்.
     புதன்கிழமை காலை பணிக்கு வந்த சரவணன், கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு மயங்கி விழுந்து நெற்றியில் அடிபட்டு இறந்தார். அவரை அலுவலகப் பணியாளர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
     மருத்துவர்கள் பரிசோதித்த பின் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். ஊத்தங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai