Enable Javscript for better performance
ஒசூரில் 54 மி.மீ. மழை: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் 54 மி.மீ. மழை: கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    By DIN  |   Published on : 01st June 2019 10:41 AM  |   அ+அ அ-   |    |  

    ஒசூரில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 54 மி.மீ. மழை பெய்தது. 
    ஒசூரில் கடந்த மே மாதம் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் என்பதால் பகலில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு 100 டிகிரிக்கும் மேல் வெயில் அடித்தது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர்.
    இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலையில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஒசூர், தளி, அஞ்செட்டி  உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. 
    காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு
    (மி.மீட்டரில்): ஒசூர்-54, தளி-15, அஞ்செட்டி- 9.4, தேன்கனிக்கோட்டை- 2.4.
    கடந்த சில நாள்களாக ஒசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்படுகிறது. அணையில் கொள்ளளவு 44 அடி. அணையில் தண்ணீர் இருப்பு 41.50. அணைக்கு 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. வரும் 500 கன அடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
    கடந்த சில தினங்களாக  தினமும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசி வருகிறது. தேன்கனிக்கோட்டை சாலையில் பழமையான மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தேர்ப்பேட்டை, காலேகுண்டா பகுதிகளில் இடி தாக்கியதில் வீடு இடிந்தது. இதில், வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், மின் வயர்கள் எரிந்து சேதமடைந்தன. சேதமடைந்த பகுதிகளை ஒசூர் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
    பாலக்கோட்டில் 29 மி.மீ. மழை
    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் வியாழக்கிழமை இரவு 29 மி.மீ. மழை பெய்தது.
    தருமபுரி மாவட்டத்தில், கடந்த 4 நாள்களாக பகல் வேளையில் வெயிலும், இரவு நேரங்களில் பரவலாக கோடை மழையும் பெய்து வருகிறது. 
    இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல பகல் முழுவதும் வெயில் காணப்பட்டது. இதையடுத்து, மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது, இடி, மின்னலுடன் சூறைக்காற்று வீசியது. பின்னர், பரவலாக மழை பெய்தது.
    இதில், சூறைக்காற்றின் காரணமாக மாவட்ட விளையாட்டு மைதானம், நெசவாளர் காலனி, காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், தருமபுரி நகரம் உள்பட பல இடங்களில் இரவு வெகுநேரம் மின்தடை ஏற்பட்டது.
    தருமபுரி மாவட்டத்தில் பெய்த மழையளவு வெள்ளிக்கிழமை காலை பதிவான நிலவரம் (மி.மீட்டரில்): தருமபுரி-21, பாலக்கோடு-29, மாரண்டஹள்ளி மற்றும் பென்னாகரம் பகுதிகளில் 3 மி.மீ. மழை பெய்தது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp