கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தர்காவில்  உரூஸ் திருவிழா நாளை தொடக்கம்

கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு  தர்காவில் உரூஸ் திருவிழா ஜூன் 13 - ஆம் தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகின்றன.

கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு  தர்காவில் உரூஸ் திருவிழா ஜூன் 13 - ஆம் தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகின்றன.
கிருஷ்ணகிரி  சுங்க வசூல் மையம் அருகே உள்ளது சங்கல்தோப்பு தர்கா. இந்த தர்காவில்  உரூஸ் திருவிழா ஜூன் 13 - ஆம் தேதி மாலை 7 மணிக்கு அனைத்து ஜமாத்தார்  முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  அன்று இரவு 10 மணிக்கு தமிழ் இஸ்லாமிய  பாடகர் இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் பாட்டுக் கச்சேரி நடைபெறுகிறது.  ஜூன் 14-ஆம் தேதி, இரவு 7 மணிக்கு தர்கா கமிட்டித்  தலைவர் சையத் நசீர் அகமத் தலைமையில் மலர் அலங்காரத்துடன் சந்தனக் குட ஊர்வலம் கோட்டை மக்கானிலிருந்து தொடங்கி,  நகரின் முக்கிய வீதிகள் வழியாக சங்கல்தோப்பு தர்கா வரை நடைபெறுகிறது.  அன்று இரவு 10 மணிக்கு கர்நாடகம்  முகமத்அலி தப்ரேஸ் குழுவினருக்கும், உத்தரப்பிரதேசம் அப்பாஸ் சாபிரி பரேல்வி குழுவினருக்கும் இடையே போட்டி உருது கல்வாலி நடைபெறும். 
இந்தத் திருவிழாவையொட்டி இரண்டு நாள்களும் பிற்பகல் 2 மணிக்கு தர்காவில் அன்னதானம் நடைபெறுகிறது.  ஜூன் 15-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தர்காவில் பாத்திஹா ஓதி  தப்ரூக் வழங்கப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று விழாவை சிறப்பிக்க வேண்டும் என நிர்வாக கமிட்டி, நகர ஜமாத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com