சுடச்சுட

    

    அதியமான் மகளிர் கல்லூரியில் சிறார் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

    By DIN  |   Published on : 13th June 2019 10:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறார் தொழிலாளர் ஒழிப்பு முறை தின உறுதிமொழி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் ஷோபா திருமால் முருகன் தலைமை வகித்து குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் உடல் நலம் குறித்தும் பேசினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கணேசன் சிறார் தொழிலாளர் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை மாணவிகளிடையே எடுத்துரைத்தார்.
    மேலும் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் மாணவிகள், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai