Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 13th June 2019 10:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
    கிருஷ்ணகிரி அணையின் நீர் மட்டம் 52 அடியாகும். ஜூன் 12-ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்வரத்தானது வினாடிக்கு 257 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு வினாடிக்கு 257 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 
    இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி அணையில் செயல்படும் பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகளுடான ஆலோசனைக் கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது.
    அப்போது, முதல் போக சாகுபடிக்கு, கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசன நீர் திறந்தவிடப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், அணையின் மதகுகளை மாற்றி அமைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று ஜூலை 5-ஆம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai