சுடச்சுட

  

  தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறார் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

  By DIN  |   Published on : 13th June 2019 10:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம், அரசுப் பள்ளிகளில் புதன்கிழமை சிறார் தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஆட்சியர் சு.மலர்விழி  உறுதிமொழி வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
  இதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் வகித்த முன்னாள் சிறார் தொழிலாளர் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்தார். 
  இதையடுத்து, அனைத்து அலுவலர்களும், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையெழுத்திட்டனர்.
  தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் ந. சரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளா (பொது)  பி.கே.கோவிந்தன், தொழிலாளர் துணை ஆய்வாளர் ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, வட்டாட்சியர் வெங்கடேசன், அரசு அலுவலர்கள், திட்ட பணியாளர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
  மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. ராஜன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், துறை அதிகாரிகள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் சிறார் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியேற்றனர்.
  இதேபோல, தருமபுரி அருகே மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சின்னமாது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் சிறார் தொழிலாளர் ஒழிப்பு
  உறுதிமொழியேற்றனர்.
  கிருஷ்ணகிரியில்...
  கிருஷ்ணகிரியில் பல்வேறு இடங்களில் சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் தலைமையில் சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  14 வயதிற்குள்பட்ட சிறார்களை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். 
  பின்னர் சிறார் தொழிலாளர் சிறப்புப் பயிற்சி மையத்தில் பயின்று, தற்போது, பட்டப்படிப்பு பயிலும் 5 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ. 6 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் வரைவோலையாகவும், 72 மாணவர்களுக்கு ரூ.4.32 ஆயிரம் இசிஎஸ் மூலமாகவும் வழங்கப்பட்டன. மேலும், 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 20 மாணவ, மாணவிகளுக்கு கைகடிகாரம் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் லோகேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி,  குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர் ப்ரியா உள்ளிட்டோர்
  பங்கேற்றனர்.
  அதேபோல், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியை பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமையில் மாணவிகள் ஏற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai