சுடச்சுட

    

    தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக நிதியுதவி

    By DIN  |   Published on : 13th June 2019 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அஞ்செட்டியில் தீவிபத்து நிகழ்ந்த வீட்டின் உரிமையாளருக்கு திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
     அஞ்செட்டி ஒன்றியம் குந்துகோட்டை ஊராட்சி குருபரப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் தச்சுத் தொழிலாளி மாதேவப்பா. இவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்கு தீவைத்து விட்டு தப்பியோடினர். இந்த விபத்தில் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாகின.
    தகவல் அறிந்த திமுக மாவட்டச் செயலாளரும், தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய். பிரகாஷ்
    அவரது வீட்டைப் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 20 ஆயிரம் திமுக சார்பில்  நிவாரண நிதியாக
    வழங்கப்பட்டது.
    உடன் தளி ஒன்றிய செயலாளர்கள் திவாகர், சீனிவாச ரெட்டி, அவைத்தலைவர் நாகராஜ், துணைச் செயலாளர் முனிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai