ஊத்தங்கரையில் ஜமாபந்தி நிறைவு விழா

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜமாபந்தி அலுவலர் தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் பொ. குணசேகரன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை வட்டாட்சியர் ஜெய்சங்கர், தனி வட்டாட்சியர் வி.நிரஞ்சன், துணை வட்டாட்சியர்கள் அரவிந்த், திருமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மொழி, தலைமை நில அளவர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பசலி-1428 வருவாய் தீர்வாயத்தில் ஜூன் 4 ம் தேதி முதல் ஜூன் 12 ம் தேதி வரை நடைபெற்ற முகாமில் பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவி தொகை, வாரிசு சான்றிதழ் என மொத்தம் 872 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 184-மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் திருமண உதவித்தொகை, ஈமச்சடங்கு, விதவை, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என உதவித் தொகைக்கான காசோலைகள் ரூ. 2 லட்சத்து 41 ஆயிரத்து 149 மதிப்பீட்டில் வழங்கப்பட்டன என்றும், மேலும் நிலுவையில் உள்ள 687 மனுக்கள் மீது ஒரு மாத காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து  வட்டாட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் சீனிவாசன் வரவேற்றார்.  செயலாளர் ஆசைதம்பி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com