பாரூர் ஏரிக்கு தண்ணீர் வரத் தொடங்கியது; விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் ஏரிக்கு தென் பெண்ணை ஆற்று நீர் வந்து கொண்டிருப்பதால்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் ஏரிக்கு தென் பெண்ணை ஆற்று நீர் வந்து கொண்டிருப்பதால் பருவ சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஏரிக்கு கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு தென் பெண்ணை ஆற்று நீர் வருகிறது. இந்த ஆற்றுநீரை ஆதாரமாகக் கொண்டே கரையோரக் கிராமங்களில் சுமார் 4,000 ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது.
இதில், பெருமளவு போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான  பண்ணந்தூர், அகரம், அரசம்பட்டி, வாடமங்கலம், செல்லம்பட்டி, நாகரசம்பட்டி, பாரூர், காவப்பட்டி, நெடுங்கல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களாகும்.
பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிடைக்கும் நீரைக் கொண்டுதான் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 7 ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு பிரதான கால்வாயின் மூலம் 1583. 75 ஏக்கர் நிலமும், பாரூர் பெரிய ஏரியின் மேற்கு பிரதான கால்வாயின் மூலம் 813. 67 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகின்றன. 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாரூர் ஏரியில் 249 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். ஆனால், 80 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே கடந்த வாரம் வரை இருந்தது.
தற்போது வறட்சி நீங்கி பருவமழைக் காரணமாக கேர் ஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பாரூர் பெரிய ஏரிக்கு 69 கன அடி தண்ணீர் கால்வாய் மூலமாக வந்து கொண்டிருக்கிறது.
மேலும் ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 7.20 அடி உள்ளது. இன்னும் பத்து நாள்களில் பாரூர் ஏரி நிரம்பும் நிலை உள்ளது. இதனால், சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com