இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு
By DIN | Published On : 14th June 2019 10:36 AM | Last Updated : 14th June 2019 10:36 AM | அ+அ அ- |

ஒசூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவர்களை கண்டுபிடிக்க, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒசூர் பஸ்தி கோபிகா கார்டன் குடியிருப்பைச் சேர்ந்த மல்லிகா, பாகலூர் சாலையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1 லட்சம் எடுத்துள்ளார். பின் அந்தப் பணத்தை வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார். அப்போது, அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மல்லிகா எதிர்பாராத நேரத்தில் அவரை திசைதிருப்பி கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை சீட்டை உடைத்து திருடிச் சென்றனர்.
பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த திருட்டுச் சம்பவத்தால் திகைத்த மல்லிகா, ஒசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், வங்கி அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.