அரசம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் படித்துறை அமைக்க கோரிக்கை

அரசம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் நீராட வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், படித்துறை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் நீராட வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், படித்துறை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டியில் தென்பெண்ணை ஆறு கடந்து செல்கிறது. இந்த ஆற்றை ஒட்டியவாறு பிரசித்தி பெற்ற தென்னீஸ்வரன் கோயில், ஐயனார் கோயில், மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து தென்பெண்ணையாற்றில் புனித நீராடி செல்கின்றனர்.
இந்த ஆற்றில் படித்துறை இல்லாமல் அரசம்பட்டி-பண்ணந்தூர் இடையே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தைச் சுற்றிலும் முள்புதர்கள் சூழ்ந்து கிடப்பதால், பொதுமக்கள் குளிக்க கடும் சிரமப்படுகின்றனர். மேலும், தண்ணீர் வரும் காலங்களில் படித்துறை இல்லாததால், ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்துச் செல்லும் நிலை
ஏற்படுகிறது.
இதுகுறித்து அங்கு வரும் பக்தர்கள் கூறுகையில், அரசம்பட்டி தென்பெண்ணை ஆற்றில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளித்து சாமியை தரிசனம் செய்து வருகிறோம். மேலும், மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தலத்தில் மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆற்றில் இறங்கி குளிக்கும் இடங்களில் முள்புதர்கள் சூழ்ந்து கிடப்பதால் குளிக்க சிரமமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படித்துறை அமைத்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com